தேவையானவை:
சிறிய வாழைக்காய் - நான்கு
உளுத்தம் பருப்பு - அரைத் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கடுகு - கால் தேக்கரண்டி
மிளகாய்ப் பொடி - ஒரு தேக்கரண்டி
வாழைக்காயை நீரில் கழுவி தோலை பட்டை பட்டையாக சீவி அகற்றிவிட வேண்டும். பிறகு பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். நறுக்கிய துண்டுகளை நீரில் போட்டுக் கொள்ள வேண்டும்.
வாணலியை அடுப்பில் வைத்து 5 தேக்கரண்டி எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு வெடிக்க விட வேண்டும். கடுகு வெடித்ததும் உளுத்தம் பருப்பைப் போட வேண்டும்.
உளுத்தம் பருப்பு சிவந்ததும் நறுக்கி வைத்திருக்கும் வாழைக்காயை அரிந்து எடுத்து வாணலியில் போட்டு உப்பையும், மிளகாய்ப் பொடியையும் சேர்த்து நன்றாகப் புரட்டி வதக்க வேண்டும்.
அடி பிடிக்காமல் தொடர்ந்து கிளற வேண்டியது முக்கியம்.
வேக நேரமாகும் போல் தோன்றினால் ஒரு கை தண்ணீர் தெளித்து ஒரு தட்டைப் போட்டு மூடி விட வேண்டும்.
ஒரு நிமிடம் கழித்து தட்டை எடுத்து விட்டுக் கிளற வேண்டும்.
பத்து நிமிடங்களுக்குப் பிறகு இறக்கி விட வேண்டும்.

No comments:
Post a Comment