Wednesday, March 2, 2011

கத்தரிக்காய் மசாலாக் கறி

100 கிராம் அளவு காராமணியை சேகரம் செய்து காலையிலேயே நீர் விட்டு ஊற வைக்க வேண்டும்.

கத்தரிக்காயை 100 கிராம் அளவு சேகரித்து நான்கு நான்காக துண்டித்து சிறிதளவு நீர் விட்டு வேக வைக்க வேண்டும்.

அதிலேயே ஒரு தேக்கரண்டி உப்பு, சிறிது புளி, ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி ஆகியவற்றைப் போட வேண்டும். காய் முக்கால் வேக்காடாக வெந்ததும் இறக்கித் தண்ணீர் வடித்துக் கொள்ள வேண்டும்.

இரண்டு மேஜைக்கரண்டி கொத்தமல்லி, பத்து மிளகாய், ஒரு மேஜைக்கரண்டி உளுத்தம் பருப்பு, ஒரு மேஜைக்கரண்டி கடலைப் பருப்பு ஆகியவற்றோடு வாணலியில் ஒரு கரண்டி எண்ணெய் விட்டு சிவக்க வறுத்துக் கொள்ளவும். பிறகு அதை பொடியாக்கிக் கொள்ள வேண்டும்.

ஊற வைத்த காராமணியை அடுப்பிலேற்றி வேக வைக்க வேண்டும். வெந்ததும் இறக்கி நீரை வடித்துக் கொள்ள வேண்டும்.

வாணலியை அடுப்பிலேற்றி ஒரு கரண்டி எண்ணெய் விட்டு ஒரு தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, இரண்டு மிளகாய் முதலியவற்றை வறுத்துக் கொள்ள வேண்டும்.

வறுபட்டதும் கத்தரிக்காய், காராமணி இரண்டையும் போட்டுக் கிளற வேண்டும்.

பிறகு இடித்த பொடியையும் ஒரு தேக்கரண்டி உப்பையும் போட்டு நன்றாகக் கிளறி விட வேண்டும்.

ஒரு மூடி தேங்காயைத் துருவி போட வேண்டும். எல்லாம் ஒன்றாக வதங்கியதும் இறக்கி விடவும்.

No comments:

Post a Comment