தேவையானவை:
வெந்த துவரம் பருப்பு - ஒரு கரண்டி
உளுத்தம் பருப்பு - அரைத் தேக்கரண்டி
பச்சை மிளகாய் - இரண்டு
எண்ணெய் - நான்கு தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - இரண்டு
மஞ்சள் பொடி - சிறிது
இஞ்சி - சிறு துண்டு
வாழைக்காய் - இரண்டு
கடலைப் பருப்பு - அரைத் தேக்கரண்டி
தேங்காய் - ஒரு மூடி
கடுகு - கால் தேக்கரண்டி
எலுமிச்சம் பழம் - ஒன்று
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
வாழைக்காயை தோலோடு சேர்த்து நான்கு துண்டுகளாக நறுக்கி தண்ணீர் விட்டு வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு தோலை உரித்து கையால் நசுக்கி, மாவு போல் உதிர்த்து விட்டுக் கொள்ள வேண்டும். அதில் உப்பு, மஞ்சள் பொடியைப் போட்டு எலுமிச்சம் பழச் சாற்றைப் பிழிந்து கொள்ளவும்.
வாணலியை அடுப்பிலேற்றி நான்கு தேக்கரண்டி எண்ணெய் விட்டுக் கடுகைப் போட வேண்டும்.
கடுகு வெடித்ததும் மிளகாய் வற்றல், உளுத்தம் பருப்பு ஆகியவற்றைப் போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும்.
பச்சை மிளகாய், இஞ்சியைப் பொடிப் பொடியாக நறுக்கிப் போட்டு சிறிது கறிவேப்பிலை போட்டு வதக்கிக் கொள்ள வேண்டும்.
வதங்கியதும் உதிர்த்து வைத்திருக்கும் வாழைக்காயை வாணலியில் கொட்டி தேங்காய்த் துருவலையும் வெந்த துவரம் பருப்பையும் போட்டு நன்கு கிளறி இறக்கி வைக்கவும்.

No comments:
Post a Comment