Wednesday, March 2, 2011

நவரத்தின கறி

தேவையானவை:

பிஞ்சு பீன்ஸ் - 100 கிராம்
உருளைக் கிழங்கு - 100 கிராம்
பாலாடை - 100 கிராம்
முந்திரி பருப்பு - 100 கிராம்
பச்சை பட்டாணி - 100 கிராம்
நெய் - ஒரு தேக்கரண்டி
காரட் - 100 கிராம்
காலிபிளவர் - 100 கிராம்
குடமிளகாய் - 100 கிராம்
உலர்ந்த திராட்சை - 100 கிராம்
தக்காளி - இரண்டு
தயிர் - ஒரு கோப்பை


இவை தவிர இவற்றை வேகவைக்க நெய், உப்பு, சர்க்கரை, அன்னாசிப் பழத் துண்டுகள் மற்றும் அலங்கரிக்க சில செர்ரி பழங்கள், வெள்ளித்தாள் (பீடாவுக்குச் சுற்றுவது) வேண்டும்.

கீழே இருப்பதை ஒன்றாகச் சேர்த்து விழுது போல முதலில் அரைத்துக் கொள்ள வேண்டும்.

பூண்டு - 6 துண்டுகள்
காஷ்மீர் மிளகாய் (சிவப்பு) - 4
கொத்தமல்லி விதை - 2 தேக்கரண்டி
கருஞ் சீரகம் (ஹஜீரா) - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - ஒரு துண்டு
சீரகம் - ஒரு தேக்கரண்டி
ஏலக்காய் - 3 தேக்கரண்டி

அடுத்து:

பிஞ்சு பீன்ஸ், உருளைக்கிழங்கு, காரட் இவைகளை சிறு சதுரங்களாக வெட்டிக் கொள்ளவும்.

காலிபிளவரை பெரிய துண்டுகளாக நறுக்கவும்.

இவை எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.

பாலாடையை சிறு துண்டுகளாக நறுக்கி நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.

உருளைக்கிழங்கை பிறகு நெய்யில் நன்றாகப் பொரித்துக் கொள்ளவும்.

குடமிளகாயை நீள நீளமான துண்டுகளாகப் போட்டுக் கொள்ளவும்.

சிறிது தண்ணீர் கலந்து, தக்காளியை அரைத்துக் கொள்ளவும்.

தயிராய் சிலுப்பிக் கொள்ளுங்கள்.

ஏற்கெனவே விழுது போல அரைத்து வைத்துள்ள பூண்டு மற்ற இதர கலவையை ஒரு வாணலியில் நெய் விட்டு பொரித்துக் கொள்ளவும்.

இப்போது தக்காளி, தயிர் இவற்றை இதனுடன் சேர்த்து சில நிமிடங்கள் வரையில் பொரிக்கவும்.

இப்போது சுவையான கூட்டு தயாராகி விட்டது.

அடுத்தபடி ஏற்கனவே துண்டு போட்டு வேக வைத்திருந்த காய்கறிகள், முந்திரி, உலர்ந்த திராட்சை, உப்பு, சர்க்கரை (தேவையான அளவு) இவற்றை இந்தக் கூட்டுடன் சேர்த்து, மீண்டும் சிறிது நேரம் வேக வைக்கவும்.

இப்போது நவரத்தின கறி ரெடி. வெள்ளித்தாளை துண்டுகளாக வெட்டிக் கொண்டு, அன்னாசிப்பழம், செர்ரி பழம் இவற்றைக் கொண்டு அலங்கரிக்கவும்.

No comments:

Post a Comment