Wednesday, March 2, 2011

வெண்டைக்காய் வதக்கல்

தேவையானவை:

வெண்டைக்காய் - அரை கிலோ
உளுத்தம் பருப்பு - அரைத் தேக்கரண்டி
உப்புப் பொடி - 2 தேக்கரண்டி
மிளகாய்ப் பொடி - ஒரு தேக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி

செய்முறை:

வெண்டைக்காயை கழுவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

வாணலியை அடுப்பிலேற்றி 5 தேக்கரண்டி எண்ணெய் விட்டு கடுகைப் போட வேண்டும். கடுகு வெடித்ததும் உளுத்தம் பருப்பை போட்டு சிவக்க வறுத்து நறுக்கி வைத்திருக்கும் வெண்டைக்காயைப் போட்டு மிளகாய்ப் பொடி, உப்பு சேர்த்து ஒரு கை தண்ணீரைத் தெளித்து புரட்டிக் கிளறி வேக விட வேண்டும்.

வெண்டைக்காயை துண்டுகளாக வெட்டுவதற்கு முன்பே கழுவி விட வேண்டும். துண்டாக்கப்பட்ட பிறகு கழுவக் கூடாது.

வெண்டைக்காய் வதக்கலுக்கு எண்ணெய் சிறிது அதிகம் செலவாகும்.

ஒரு தேக்கரண்டி கடலைமாவும், இரண்டு தேக்கரண்டி அரிசி மாவும் கலந்து வெண்டைக்காய்க் கறியில் தூவி புரட்டினால் வெண்டைக்காய் வதக்கல் மொறு மொறுவென நன்றாக இருக்கும்.

No comments:

Post a Comment