Wednesday, March 2, 2011

பாகற்காய் வறுத்த கறி

பாகற்காய் 200 கிராம் சேகரித்து வட்டமாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்திலிட்டு சிறிது தண்ணீர் விட்டு ஒரு மேஜைக்கரண்டி உப்பு ஆகியவற்றைப் போட்டு வேக விடவும்.

காய் வெந்ததும் இறக்கி தண்ணீரை வடித்து விட வேண்டும்.

வாணலியை அடுப்பிலேற்றி இரண்டு கரண்டி எண்ணெய் விட்டு, ஒரு தேக்கரண்டி கடுகு, சிறிது பெருங்காயம் ஆகியவற்றைப் போட்டு வறுத்துக் கொண்டு காயை அதில் போட வேண்டும்.

காய் வதங்கத் தொடங்கியதும் மிளகாய்ப் பொடி ஒரு மேஜைக்கரண்டி போட்டு நன்றாகக் கிளற வேண்டும்.

காய் வறுபடும் படி மேலும் எண்ணெய் விட வேண்டும். எண்ணெய் அதிகமாக விட்டால் தான் காய் நன்றாக வறுபடும். நன்றாக காய் வறுபட்டால் தான் அது கசக்காமல் ருசியாக இருக்கும்.

No comments:

Post a Comment