Wednesday, March 2, 2011

எண்ணெய் கத்தரிக்காய்

இரண்டு மேஜைக்கரண்டி கடலைப் பருப்பு, கொத்தமல்லி விதை ஒரு மேஜைக்கரண்டி, பச்சை மிளகாய் எட்டு, சுண்டைக்காய் அளவு பெருங்காயம், ஒரு மூடி தேங்காய்த் துருவல் ஆகியவற்றை வாணலியில் ஒரு கரண்டி எண்ணெய் விட்டு அதில் போட்டு சிவக்க வறுக்க வேண்டும்.

பிறகு அவற்றை பொடி செய்து கொள்ள வேண்டும்.

200 கிராம் அளவு பிஞ்சு கத்தரிக்காயை எடுத்து நான்காகப் பிளந்து இடித்தப் பொடியையும் ஒரு மேஜைக்கரண்டி உப்பையும், ஒரு எலுமிச்சம் பழ அளவு புளியையும் சிறிது தண்ணீர் விட்டு குழைத்து பிளந்த காயினுள் போட்டு தாளித்து மேலேயும் நன்றாகத் தடவி விட வேண்டும்.

அடுப்பில் வாணலியை வைத்து இரண்டு கரண்டி எண்ணெய் விட வேண்டும்.  அது காய்ந்ததும் ஒரு தேக்கரண்டி கடுகு, ஒரு தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, 2 மிளகாய் ஆகியவற்றைப் போட்டு சிவக்க வறுபட்டதும் காயையும் போட்டு நன்றாகக் கிளறி மேலே மூடி விட வேண்டும்.

அடிக்கடி மூடியைத் திறந்து கிளற வேண்டும். ஏறத்தாழ 5 நிமிடங்களில் காய் நன்றாக வெந்து விடும்.

மேலும் சிறிது எண்ணெய் விட்டு நன்றாகக் கிளறி இறக்கி வைக்கவும்.

No comments:

Post a Comment