உருளைக் கிழங்கு 200 கிராம் அளவு எடுத்து ஒரு பாத்திரத்திலிட்டு சிறிது நீர் விட்டு அடுப்பிலேற்றி வேக விட வேண்டும்.
பாதி வெந்ததும் இறக்கி உருளைக் கிழங்குகளின் தோலை உரித்து நான்கு நான்காகத் துண்டுப் போட்டுக் கொள்ள வேண்டும்.
ஒரு தேக்கரண்டி உளுத்தம பருப்பு, ஒரு தேக்கரண்டி கடலைப் பருப்பு, ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி விதை, நான்கு மிளகாய் ஆகியவற்றை வாணலியில் ஒரு கரண்டி எண்ணெய் விட்டு சிவக்க வறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதை பொடி செய்து கொள்ள வேண்டும்.
நான்கு வெங்காயத்தையும் இரண்டு பச்சை மிளகாயையும் எடுத்து அவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
வாணலியை அடுப்பிலேற்றி ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டுக் காய விட வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் ஒரு தேக்கரண்டி கடுகு, சிறிது பெருங்காயம் ஆகியவற்றைப் போட வேண்டும்.
கடுகு வெடித்ததும், வெங்காயம், பச்சை மிளகாயைப் போட்டு வதக்க வேண்டும்.
அவை நன்கு சிவந்ததும் உருளைக் கிழங்கைப் போட்டு கிளற வேண்டும்.
பிறகு பொடித்த பொடியையும் ஒரு மேஜைக்கரண்டி உப்பையும் போட்டு நன்கு கிளற வேண்டும்.
மேலும் சிறிது எண்ணெய் விட்டு உருளைக்கிழங்கு நன்றாக வேகும் வரை அடுப்பிலேயே வைத்து, பிறகு இறக்கி விட வேண்டும்.

No comments:
Post a Comment