Thursday, March 3, 2011

சீரகப் பொடி

சீரகம் 200 கிராம், மிளகு 50 கிராம், உளுத்தம் பருப்பு 50 கிராம், உப்பு ஒன்றரைத் தேக்கரண்டி, மிளகாய் வற்றல் மூன்று, பெருங்காயம் சிறிது, இவற்றை எல்லாம் தனித்தனியே வறுத்து, மிஷினில் கொடுத்து பொடி செய்து கொள்ளவும்.

இந்தப் பொடியையும் நெய்யில் போட்டுப் பிசைந்து சாப்பிடலாம்.

சீரணக் கோளாறு ஏதும் இருந்தால் இந்தப் பொடியை இரண்டு மூன்று வேளைகள் சாதத்தில் போட்டுப் பிசைந்து நெய்யுடன் சாப்பிட்டால் குணமாகி விடும்.

No comments:

Post a Comment