Thursday, March 3, 2011

எள்ளுப் பொடி

தேவையானவை:

எள் - 300 கிராம்
காய்ந்த மிளகாய் - பத்து
புளி - நெல்லிக்காய் அளவு
பூண்டு - நான்கு பற்கள்
உப்பு - தேவையான அளவு

காய்ந்த மிளகாயை வாணலியிலிட்டு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு எள்ளை வறுத்துக் கொள்ள வேண்டும். எள் லேசாக வெடிக்கத் தொடங்கியதும் இறக்கி முறத்தில் கொட்டி லேசாகத் தேய்த்துப் புடைத்துக் கொள்ள வேண்டும்.

கல் உரலில் இடித்தால் தான் எள்ளுப் பொடி நன்றாக இருக்கும்.

முதலில் மிளகாய், உப்பு, பூண்டு முதலியவற்றை இடித்துக் கொள்ள வேண்டும்.

மிளகாய் விதை நசுங்கியதும், புளியைக் கலந்து இடிக்க வேண்டும். எல்லாம் ஒன்றாகச் சேர்ந்ததும் எள்ளைக் கலந்து இடிக்க வேண்டும். எள் நன்கு இடி பட்டதும் உப்புப் பொடியை சேர்த்து இடித்து எடுத்து தக்க பாத்திரத்தில் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment