தேவையானவை:
வாழைக்காய் - இரண்டு
உப்பு - ஒரு தேக்கரண்டி
கடலைப் பருப்பு - ஒரு தேக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
பச்சை மிளகாய் - மூன்று
தேங்காய்த் துருவல் - இரண்டு தேக்கரண்டி
மஞ்சள் பொடி - சிறிதளவு
புளி - கொட்டைப்பாக்கு அளவு
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லி விதை - ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் - சிறு துண்டு
செய்முறை:
வாழைக்காயின் தோலை சீவி துண்டுத் துண்டாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
நறுக்கிய துண்டுகளை ஒரு பாத்திரத்திலிட்டு சிறிது நீர் விட்டு அடுப்பிலேற்றி மஞ்சள் பொடியையும் அரைத் தேக்கரண்டி உப்பையும் போட்டு கொட்டைப்பாக்கு அளவு புளியைக் கரைத்து புளித் தண்ணீரையும் அதில் சேர்த்து நன்றாக வேக விட வேண்டும்.
வெந்தவுடன் கீழே இறக்கி நீரை வடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
வாணலியை அடுப்பிலேற்றி எண்ணெய் விட்டு அரைத் தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கொத்தமல்லி விதை, மிளகாய் வற்றல் ஆகியவற்றைப் போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும். கடைசியாக பெருங்காயத்தைப் போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும்.
தேங்காய்த் துருவலை அத்துடன் கொட்டி சிவக்க வறுத்து எடுத்து உப்பை அரைத் தேக்கரண்டி போட்டு பட்டுப் போல பொடி செய்து கொள்ள வேண்டும்.
மறுபடியும் வாணலியில் எண்ணெய் விட்டு கடுகை போட்டு வெடிக்கவிட்டு அரைத் தேக்கரண்டி உளுத்தம் பருப்பை போட்டு சிவக்க வறுத்து, உதிர்த்து வைத்திருக்கும் வாழைக்காயை வாணலியில் கொட்டி தயார் செய்து வைத்திருக்கும் தனிப் பொடியைத் தூவி நன்றாகக் கிளறி தேவையான அளவு எண்ணெய் விட்டு புரட்டி எடுக்க வேண்டும்.
இறக்கியதும் கறிவேப்பிலை பொடிப் பொடியாக கிள்ளிப் போட்டு ஒரு கிளறு கிளறி மூடி வைக்க வேண்டும்.

No comments:
Post a Comment