Thursday, March 3, 2011

இட்லி மிளகாய்ப் பொடி

இட்லி, தோசை போன்ற சிற்றுண்டிகளுக்கு நல்லெண்ணெய் அல்லது நெய் சேர்த்துத் தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.

தேவையானவை:

காய்ந்த மிளகாய் - 100 கிராம்
உளுத்தம் பருப்பு - 100 கிராம்
கடலைப் பருப்பு - 100 கிராம்
பெருங்காயம் - சிறிது
எள் - ஒரு தேக்கரண்டி
நல்லெண்ணெய் - அரைத் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

எண்ணெயில் பெருங்காயத்தைப் பொரித்துக் கொள்ள வேண்டும். மிகுந்த எண்ணெயில் காய்ந்த மிளகாயைப் போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும்.

அதே வாணலியில் கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, எள் முதலியவற்றையும் எண்ணெய் விடாமல் வறுத்துக் கொள்ளவும்.

முதலில் மிளகாய் பருப்பு வகைகளைப் பொடி செய்து கொள்ள வேண்டும். பிறகு உப்பு கலந்து இடித்துக் கொள்ள வேண்டும்.

ஒரு கை கறிவேப்பிலையை வாணலியில் நீர்ச்சுண்ட வறுத்துத் தூள் செய்து மிளகாய்ப் பொடியுடன் கலந்து கொண்டால் சுவையாக இருக்கும்.

No comments:

Post a Comment