உப்புப் போட்ட மாங்காய் வற்றலை நன்றாய் அலம்பி ஒன்றரை ஆழாக்கு ஜலத்தில் வேக விடவும். 12 வற்றலும் ஒரு மாங்கொட்டையும் இருந்தால் போதும்.
பிறகு இரண்டு தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, 12 மிளகு, மிளகாய் வற்றல் 3 இவற்றை நெய்யில் வறுத்து மைபோல் அரைத்துக் கொதிக்கும் மாங்காயில் கொட்டவும்.
மேற்கண்டவை நன்றாக வெந்ததும், புளியும் உப்பும் தேவைப்பட்டால் சிறிது கரைத்துக் கொட்டிக் கொதிக்க விடவும். இரண்டு கொதி வந்ததும் அரிசி மாவைக் கொஞ்சம் கரைத்துக் கொட்டவும்.
அதன்பின்னர் தாளிப்புக் கரண்டி வைத்து இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டுக் காய்ந்ததும் அரைத் தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, கொஞ்சம் கறிவேப்பிலை, சிறு பெருங்காயம் இவற்றைத் தாளித்ததில் போட்டு சப்தம் அடங்கியதும் கொதித்துக் கொண்டிருக்கும் குழம்பில் கொட்டிக் கிளறி விட்டு இறக்கவும்.

No comments:
Post a Comment