Thursday, February 24, 2011

மணத்தக்காளி வற்றல் குழம்பு

ஒரு தேக்கரண்டி மணத்தக்காளி வற்றலைப் பொன்னிறமாக நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.

மிளகு அரைத் தேக்கரண்டி, மிளகாய் வற்றல் 8 , கொப்பரைத் துருவல் இரண்டு தேக்கரண்டி, மஞ்சள் சிறிதளவு, வெங்காயம் 50 கிராம், மல்லி ஒரு தேக்கரண்டி, பூண்டு பெரிய பருப்பு 4 இவைகளை நெய்யில் வறுத்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

இந்த மசாலாவை 300 மில்லி ஜலத்தில் கரைத்து, சிறு எலுமிச்சங்காய் அளவு புளி, உப்பு 2 தேக்கரண்டி இவற்றையும் கரைத்துக் கொண்டு மசாலாவுடன் சேர்த்து அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும்.

குழம்பு நன்றாகக் கொதித்தவுடன் வறுத்து வைத்திருக்கும் மணத்தக்காளி வற்றலை அத்துடன் சேர்த்துக் கொதிக்க விடவும்.

பிறகு தாளிப்புக்கு ஒரு பாத்திரம் வைத்து ஒரு தேக்கரண்டி நெய் விட்டுக் காய்ந்ததும் அரிந்த வெங்காயம் 50 கிராம், உளுத்தம் பருப்பு அரைத் தேக்கரண்டி, சீரகம் கால் தேக்கரண்டி, கறிவேப்பிலை கொஞ்சம் இவற்றைப் போட்டுத் தாளிதம் செய்து, சப்தம் அடங்கியதும் குழம்பை இந்த தாளித்ததில் கொட்டி ஒரு கொதி வந்ததும் இறக்கி வைத்துக் கொள்ளவும.

No comments:

Post a Comment