200 கிராம் பிடிகருணைக் கிழங்கை ஜலத்தில் முக்கால் பாகம் வேகவைத்து தோலை உரித்துவிட்டு கால் அங்குல கனத்தில் வில்லை வில்லையாக அரிந்து கொள்ளவும். வெள்ளைப் பூண்டு ஒன்று இதைத் தோல் உரித்து பருப்பை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
சிறு தக்காளிப் பழத்தை நான்காக வகுத்துக் கொள்ளவும்.
சிறு புளியும், ஒன்றரை தேக்கரண்டி உப்பும், 400 மில்லி ஜலத்தில் கரைத்து, சாம்பார்ப் பொடி 2 தேக்கரண்டி போட்டு கரைத்து வைத்துக் கொள்ளவும். அடுப்பில் சட்டியை வைத்து நான்கு தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டுக் காய்ந்ததும், கடுகு அரைக்கால் தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு கால் தேகரண்டி, கடலைப் பருப்பு கால் தேக்கரண்டி, பெருங்காயம் சுண்டைக்காய் அளவு, வெந்தயம் பத்து, கறிவேப்பிலை கொஞ்சம் சேர்த்து தாளிதம் செய்து, வெள்ளைப் பூண்டையும் தக்காளிப் பழத்தையும் போட்டு வதக்கவும்.
வெள்ளைப் பூண்டு நன்றாக வதங்கியதும், சுத்தம் செய்து வைத்திருக்கும் கருணைக் கிழங்கைப் போட்டு இரண்டு மூன்று முறை கிளறி விட்டு கரைத்து வைத்திருக்கும் புளி ஜலத்தைக் கொட்டவும்.
குழம்பு நன்றாகக் கொதித்துச் சுண்டியதும் அரிசி மாவு அரைத் தேக்கரண்டி, சிறிது ஜலத்தில் கரைத்துக் கொட்டி சுண்டைக்காய் அளவு வெல்லத்தையும் போட்டு இரண்டு கொதி வந்ததும் இறக்கவும்.

No comments:
Post a Comment