முற்றின இரண்டு வாழைக்காய்களை தோல் சீவி, சன்னமாய் அரிந்து அதை 100 மில்லி மோரில் போடவும். 50 மில்லி ஜலத்தில் அரைத் தேக்கரண்டி உப்பும் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளும் போட்டு அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும். காய் வெந்து பக்குவமானதும் ஜலத்தை வடித்துவிட்டு காயை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
50 கிராம் பயற்றம் பருப்பை அரைப்பதமாக வேக வைத்து இறக்கிக் கொள்ளவும். ஜலம் மீதாமல் பருப்போடு கெட்டியாக இருக்கும் விதம் வேகவைத்துக் கொள்ளவும்.
பிறகு வாணலியை அடுப்பில் வைத்து நான்கு தேக்கரண்டி நெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு அரைக்கால் தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு ஒரு தேக்கரண்டி, மிளகாய் வற்றல் இரண்டு, கறிவேப்பிலை கொஞ்சம் இவற்றைப் போட்டுத் தாளிதம் செய்து வாழைக்காயை அதில் போட்டு வதக்கவும்.
வாழைக்காய் முக்கால் பதம் வதங்கியதும் பருப்பைப் போட்டுக் கிளறிக் கொடுத்து உப்புப் பொடி ஒன்றரைத் தேக்கரண்டி போட்டு ஜலம் சுண்டியதும் தேங்காய்த் துருவல் நான்கு தேக்கரண்டி போட்டு வதங்கியதும் இறக்கவும்.

No comments:
Post a Comment