வாழைக்காய் இரண்டு இதன் காம்பையும் தோலையும் போக்கிவிட்டு சதுரம் சதுரமாய் அரிந்து கொள்ளவும்.
மிளகாய் இரண்டு, மிளகு ஆறு, மஞ்சள் சிறிது இவற்றை வறுத்து நேக அரைத்து 100 மில்லி ஜலத்தில் உப்பு ஒரு தேக்கரண்டி சேர்த்துக் கரைத்து துண்டித்த வாழைக்காய்களை அதில் வேகவிடவும். ஜலம் சுண்டி வாழைக்காய் வெந்ததும் தாளிப்புக்கு ஒரு பாத்திரம் வைத்து நெய் இரண்டு தேக்கரண்டி விட்டுக் காய்ந்ததும் கறிவடகம் இரண்டு தூள் செய்து போட்டு சிவந்து வரும் சமயம் வேக வைத்திருக்கும் வாழைக்காயைப் போட்டுப் புரட்டிக் கொடுத்து, தேங்காய்த் துருவல் கால் மூடி போட்டு, கறிமாப் பொடி ஒரு தேக்கரண்டி போட்டு கிளறி விட்டு இறக்கவும்.

No comments:
Post a Comment