Monday, February 28, 2011

பருப்பு உருண்டை ரசம்

துவரம் பருப்பு 200 கிராம், கடலைப் பருப்பு 100 கிராம், எட்டு மிளகாய் ஆகியவற்றைத் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.

இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, பருப்புகளை நீரில் கழுவிச் சுத்தப்படுத்தி, உரலிலிட்டு ஒரு மேஜைக்கரண்டி உப்பு சேர்த்துக் கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

வாணலியை அடுப்பிலேற்றி ஒரு கரண்டி எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் அரைத்தப் பருப்பைப் போட்டுக் கிளற வேண்டும். முக்கால் வேக்காடாக வெந்ததும் இறக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு தேக்கரண்டி மிளகு, அரைத் தேக்கரண்டி சீரகம், ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி விதை, இரண்டு மிளகாய் ஆகியவற்றை அம்மியில் வைத்துப் பொடி செய்து கொள்ள வேண்டும்.

எலுமிச்சம் பழ அளவு புளி, மேஜைக்கரண்டி உப்பு, பொடித்த பொடி ஆகியவற்றுடன் 600 மில்லி நீர் சேர்த்து அடுப்பில் வைக்க வேண்டும்.

கொதி வந்ததும் கிளறி வைத்திருக்கும் பருப்பைச் சிறு சிறு உருண்டைகளாகச் செய்து போட வேண்டும்.

உருண்டை கரையாதவாறு மெல்லக் கிளறி கொடுக்க வேண்டும்.

ரசம் நன்றாகக் கொதித்து உருண்டை வெந்த பிறகு இறக்கி கடுகு, பெருங்காயம் தாளித்துச் சிறிது கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை கிள்ளிப் போட்டு இறக்கி விட வேண்டும்.

No comments:

Post a Comment