Wednesday, February 23, 2011

சர்க்கரை பொங்கல்


தேவையானவை:

பச்சரிசி - 500 கிராம்
வெல்லம் - 350 கிராம்
பால் - 200 மில்லி
நெய் - 150 மில்லி
பாசி பருப்பு - 125 கிராம்
தேங்காய் - 1 மூடி
ஏலக்காய் - 6
முந்திரி - 15 கிராம்
திராட்சை - 50 கிராம்
பச்சை கற்பூரம் - சிறிது
குங்குமப்பூ - சிறிது
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அரிசி, பருப்பு இரண்டையும் தனியாக ஒரு வாணலியில் சிறிது வறுத்து எடுத்து கொள்ள வேண்டும்.

அதே வாணலியில் சிறிது நெய் விட்டு தேங்காயை துருவிப்போட்டு சிவக்க வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

முந்திரிப் பருப்பையும், திராட்சையையும் தனியாக  வறுத்து கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தை அடுப்பிலேற்றி இரண்டு லிட்டர் அளவுக்கு நீர் விட்டுக் கொதிக்க விட வேண்டும். நீர் கொதித்ததும் அரிசியையும் பருப்பையும் கலந்து போட வேண்டும்.

இவை வெந்ததும் பாலை ஊற்றி ருசிக்கு ஏற்ப உப்பைப் போட்டு நன்றாக கிளறி வறுத்த முந்திரி பருப்பையும் திராட்சையையும் போட்டு பதமான அளவில் வேக விட வேண்டும்.

மற்றொரு பாத்திரத்தில் வெல்லத்தை உடைத்துப் போட்டுச் சிறிது நீர் விட்டுப் பாகு காய்ச்ச வேண்டும்.

பாகு பதமானதும் அடுப்பில் வேகும் சாதத்தில் பாகைச் சிறிது சிறிதாக ஊற்றிக் கிளற வேண்டும்.

பிறகு தேங்காய்ப்பூ, பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ, நெய் இவற்றை சேர்த்து மேலும் கிளறிச் சிறிது நேரம் அடுப்பில் வைத்திருந்து இறக்கி விட வேண்டும்.

No comments:

Post a Comment