தேவையானவை:
பச்சரிசி - 500 கிராம்
பாசி பருப்பு - 100 கிராம்
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
நெய் - 100 மில்லி
முந்திரி - 100 கிராம்
இஞ்சி - சிறிது
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் ஒன்றரை லிட்டர் நீரை விட்டு அடுப்பிலேற்ற வேண்டும். நீர் கொதித்ததும் அரிசியையும் பருப்பையும் போட வேண்டும். இஞ்சியையும் தட்டிப்போட வேண்டும். அரிசியும் பருப்பும் வெந்ததும் உப்புப் போட்டு இறக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
வாணலியை அடுப்பிலேற்றி நெய்யை ஊற்ற வேண்டும். நெய் காய்ந்ததும் மிளகைப் போட வேண்டும். மிளகு வெடிக்கத் தொடங்கியதும் சீரகத்தைப் போட்டு உடனேயே முந்திரிப் பருப்பையும் சிறிதளவு கறிவேப்பிலையும் போட வேண்டும்.
முந்திரிப் பருப்பு சிவந்ததும் இறக்கிப் பொங்கலில் ஊற்றி ஒன்றாகக் கிளறிக் கொள்ள வேண்டும்.

No comments:
Post a Comment