Wednesday, February 23, 2011

சாம்பார் சாதம்


தேவையானவை:

அரிசி - 500 கிராம்
புளி - எலுமிச்சம் பழ அளவு
துவரம் பருப்பு - 125 கிராம்
சாம்பார் வெங்காயம் - 100 கிராம்

தாளிக்க:

கடுகு - 5 கிராம்
சிகப்பு மிளகாய் - 2   
கறிவேப்பிலை - சிறிது

எண்ணெயில் வறுத்து பொடி செய்ய:

சிகப்பு மிளகாய் - 7
கொத்தமல்லி விதை - 1 தேக்கரண்டி
கடலை பருப்பு - அரை தேக்கரண்டி
துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிது  

செய்முறை:

முதலில் துவரம் பருப்பை, வெங்காயம் சேர்த்து வேக வைத்து கொள்ள வேண்டும்.

பொடி செய்ய வேண்டியவற்றை எண்ணெயில் வறுத்து செய்து கொள்ள வேண்டும்.

பிறகு அரிசியை நன்றாக குழைவாக வேக வைத்து பருப்பை போட்டு கலக்க வேண்டும்.

புளியை நீரில் கரைத்து அதனுடன் பொடி செய்ததை சேர்த்து சாதத்துடன் கலந்து கிளற வேண்டும்.

நன்றாக எல்லாம் கலந்து கொதித்ததும் இறக்கி விட வேண்டும்.

கடாயில் தாளிக்க வேண்டியதை தாளித்து சாதத்தில் சேர்த்து கிளற வேண்டும

No comments:

Post a Comment