பதினைந்து முற்றின நெல்லிக்காய்களை நீராவியில் வேக வைத்து, கொட்டைகளை அகற்றிவிடவும்.
ஆறு மிளகாய் வற்றல், அரைத் தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, பெருங்காயம் சிறிதளவு, தேங்காய்த் துருவல் அரை மூடி இவற்றைப் பொன்னிறமாக வறுத்து, பிறகு ஒரு தேக்கரண்டி உப்பையும் சேர்த்துப் பொடி செய்து கொள்ளவும்.
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து மூன்று தேக்கரண்டி நெய் விட்டுக் காய்ந்ததும் சீரகம் கால் தேக்கரண்டி உளுத்தம் பருப்பு அரைத் தேக்கரண்டி, மிளகாய் வற்றல் இரண்டு இவற்றைப் போட்டு கறிவேப்பிலை ஆர்க்கு ஒன்று உருவிப் போட்டு, பருப்பு சிவந்ததும் நெல்லிக்காயை ஒன்றாய்ப் பிசைந்து தாளிப்பில் போட்டு புரட்டிக் கொடுத்து செய்து வைத்திருக்கும் பொடியைப் போட்டுப் புரட்டவும்.
பிறகு தேங்காய்த் துருவல் கால் மூடி, கொத்தமல்லித் தழை இருபது அலம்பிச் சுத்தம் செய்து போட்டுப் புரட்டி எடுக்கவும்.

No comments:
Post a Comment