Monday, February 28, 2011

பறங்கிக்காய் பொரியல்

பறங்கிக்காய் முந்நூறு கிராம், இதை மேல் தோல் நீக்கி உள்ளிருக்கும் விதைகளை எடுத்துவிட்டு சதுரம் சதுரமாக அரிந்து சிறிது ஜலம் விட்டு வேக விடவும். மிளகாய் வற்றல் இரண்டு, மிளகு ஆறு, மஞ்சள் சிறிதளவு இவற்றை எல்லாம் அரைத்து வேண்டு கொண்டிருக்கும் காயில் போடவும். உப்பு ஒரு தேக்கரண்டி போடவும்.

பிறகு அடுப்பில் தாளிப்புக்கு ஒரு பாத்திரம் வைத்து நெய் மூன்று தேக்கரண்டி விட்டுக் காய்ந்ததும் கறிவடகம் இரண்டு தூள் செய்து போட்டு, சிவந்து வரும் சமயம் வெந்துக் கொண்டிருக்கும் காயை அதில் கொட்டிக் கிளறிக் கொடுத்து கால் மூடி தேங்காய்த் துருவல் போட்டு கறி மசாலாப் பொடி ஒரு தேக்கரண்டி போட்டு கிளறவும்.

No comments:

Post a Comment