மேல் தோல் நீக்கி விதை எடுத்த பூசணிக்காய் முந்நூறு கிராம், இதைச் சதுரமாக அரிந்து கொள்ளவும். சுத்தம் ஜலம் 100 மில்லியில் இந்தப் பூசணித் துண்டுகளைப் போட்டு வேக வைத்து ஜலத்தை வடித்து விடவும்.
மிளகாய் இரண்டு, மிளகு ஆறு, கொப்பரைத் துருவல் மூன்று தேக்கரண்டி, தனியா இருபது கிராம், மஞ்சள் ஒரு சிட்டிகை இவைகளை எல்லாம் நெய்யில் வறுத்து நேக அரைத்து ஒரு ஆழாக்கு ஜலத்தில் கரைத்து, உப்பு ஒரு தேக்கரண்டி, புளி ஒரு கொட்டைப்பாக்கு அளவு இவற்றை மேற்படி ஜலத்தில் கரைத்து, அரைத்த மசாலாவையும் போட்டுக் கரைத்துக் கொண்டு, தாளிப்புக்கு ஒரு பாத்திரம் வைத்து, நெய் இரண்டு தேக்கரண்டி விட்டுக் காய்ந்ததும் உளுத்தம் பருப்பு அரைத் தேக்கரண்டி, கடுகு அரைக்கால் தேக்கரண்டி, சீரகம் கால் தேக்கரண்டி, கறிவேப்பிலை கொஞ்சம் இவற்றைப் போட்டுச் சப்தம் அடங்கியதும் பூசணிக்காயைத் தாளித்ததில் கொட்டி கறி மசாலாப் பொடி ஒரு தேக்கரண்டி போட்டுப் புரட்டிக் கொடுத்து, மல்லித் தழை பத்து போட்டு கிளறிவிட்டு இறக்கவும்.

No comments:
Post a Comment