Wednesday, February 23, 2011

கூட்டாஞ்சோறு


தேவையானவை:

அரிசி - 500 கிராம்
கடலைப் பருப்பு - 50 கிராம்
முருங்கைக்காய் - ஒன்று
உருளைக்கிழங்கு - 50 கிராம்
சாம்பார் வெங்காயம் - 50 கிராம்
மாங்காய் - சிறியது
மாங்காய் கிடைக்காவிட்டால் புளிப்புச் சுவைக்கு ஏற்ப புளி சேர்க்கலாம்
துவரம் பருப்பு - 65 கிராம்
பாசி பருப்பு - 50 கிராம்
கத்தரிக்காய் - 50 கிராம்
வாழைக்காய் - ஒன்று
கொத்தவரங்காய் - 15 கிராம்
தேங்காய் - 3 வில்லைகள்
தேங்காய் எண்ணெய் - 1 கரண்டி
மஞ்சள் பொடி - 2 சிட்டிகை

செய்முறை:

மூன்று பருப்பு வகைகளையும் தனியே வேக வைக்க வேண்டும். சாததிற்குப் புழுங்கல் அரிசியைப் பயன் படுத்துவதாக இருந்தால் பருப்புகள் அரிசியுடன் சேர்த்துப் போட்டு வேக வைக்கலாம்.இல்லையானால் பருப்புகள் சற்று வெந்ததும் அரிசியைப் போட வேண்டும். உலை கொதி வந்ததும் எல்லாக் காய்களையும் நறுக்கிப் போட வேண்டும். வெங்காயத்தைத் தோல் உரித்துப் போட வேண்டும்.

எல்லாம் சேர்த்து வெந்து வரும் சமயம் உப்பையும் மஞ்சள் பொடியையும் சேர்த்துக் கிளறிக் கொள்ள வேண்டும்.

தேங்காய் வில்லைகளைத் துருவி அதைச் சாதத்தில் சேர்த்து சாதத்தைக் குழைய வேக விட வேண்டும்.

சாதத்தில் சிறிது தேங்காய் எண்ணெயைக் கலந்து கறிவேப்பிலையை ஒன்றிரண்டாக கிள்ளிப் போட்டு இறக்க வேண்டும்.

No comments:

Post a Comment