Wednesday, February 23, 2011

எள்ளுச் சாதம்


தேவையானவை:

எள் - 250 கிராம்
உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
பெருங்காயம் - கொட்டைப்பாக்கு அளவு
நெய் - இரண்டு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
அரிசி - 400 கிராம்
சிகப்பு மிளகாய் - 8
எண்ணெய் - ஒரு கரண்டி
பச்சை மிளகாய் - 6

செய்முறை:

எள், உளுத்தம் பருப்பு, சிகப்பு மிளகாய், பெருங்காயம் இவைகளை வறுத்து உப்பு சேர்த்து நன்றாகப் பொடி செய்து கொள்ள வேண்டும்.

எண்ணெயையும் நெய்யையும் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, சிகப்பு மிளகாய், பச்சை மிளகாய் இவற்றைப் போட்டுத் தாளித்துக் கொள்ள வேண்டும்.

அரிசியை வடித்துச் சாதத்தை ஆற வைத்து அதன் மீது எள்ளுப் பொடியைத் தூவி தாளித்து வைத்துள்ளதையும் கொட்டிக் கலந்து கொள்ள வேண்டும். தாளிக்கும் போது சிறிதளவு கறிவேப்பிலையும் கிள்ளிப் போட்டுக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment