தேவையானவை:
அரிசி - 400 கிராம்
மாங்காய் துருவல் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 10 கிராம்
தேங்காய் துருவல் - 50 கிராம்
முந்திரி - 15 கிராம்
மஞ்சள் பொடி - இரண்டு சிட்டிகை
கடுகு - 10 கிராம்
நல்லெண்ணெய் - 100 கிராம்
பெருங்காயம் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அரிசியைச் சாதமாக சமைத்து அகன்ற ஒரு தட்டில் கொட்டிக் கொள்ள வேண்டும்.
சாதம் ஆறிய பிறகு மாங்காய்த் துருவலை அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.
தேங்காய்த் துருவலுடன் கடுகு, மிளகாய், உப்பு சேர்த்து சிறிது நீர் தெளித்து மைய அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த விழுதைச் சாதத்துடன் சேர்த்து மஞ்சள் பொடி கலந்து நன்கு கிளறி விட்டுக் கொள்ள வேண்டும்.
வாணலியை அடுப்பிலேற்றி நல்லெண்ணெய் விட்டுக் காய விட வேண்டும். எண்ணெய்க் காய்ந்ததும் பெருங்காயம், கடுகு, உளுத்தம் பருப்பு, முந்திரி, கடலைப் பருப்பு சேர்த்து போட்டு தாளித்துச் சாதத்தில் கொட்டி கிளறிக் கொள்ள வேண்டும்.

No comments:
Post a Comment