இரண்டு படி கொள்கிற ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து 300 மில்லி ஜலம் விட்டுக் கொதித்ததும் 100 மில்லி துவரம் பருப்பு, சிட்டிகை மஞ்சள் பொடி, கால் தேக்கரண்டி நல்லெண்ணெய் இந்த மூன்றையும் போட்டுத் துவரம் பருப்பைக் குழைய வேக வைத்துக் கொள்ளவும்.
பிறகு 200 மில்லி ஜலத்தில் எலுமிச்சங்காய் அளவு புளி, மூன்று தேக்கரண்டி உப்பு இவை இரண்டையும் போட்டு நன்றாகக் கரைத்து சாம்பார்ப்பொடி 3 அல்லது 4 தேக்கரண்டி போட்டு நன்றாகக் கரைத்து பருப்பில் கொட்டிக் கொதிக்க விடவும். நான்கு பச்சைமிளகாயைத் துண்டித்து விடாமல் பிளந்து சாம்பாரில் போடவும். அரைமூடித் தேங்காய்த் துருவலைப் பொன் வறுவலாக வறுத்து அரைத்துச் சாம்பாரில் போடவும்.
இதன் பின்னர் புளிப்பாய் உள்ள சிறிய மாம்பழம் பத்து அல்லது சிறிய நீள மாம்பழம் பத்தை எடுத்து நன்றாக அலம்பி காம்பை அகற்றிவிட்டு மாம்பழத்தின் இரு பக்கங்களிலும் நுனிப்பக்கமும் காம்புப்பக்கமும் துண்டித்துப் போகாமல் அரிந்து, கொதிக்கிற சாம்பாரில் போட்டு மூடி வைக்கவும்.
இரண்டு கொதி வந்ததும் தாளிப்புக்கு ஒரு கரண்டி வைத்து மூன்று தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு நன்றாய்க் காய்ந்ததும் மிளகாய் வற்றல் இரண்டு கிள்ளிப் போடவும். பிறகு கால் தேக்கரண்டி கடுகு, அரைத் தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, ஒரு தேக்கரண்டி கடலைப் பருப்புப் போட்டுச் சிவந்ததும் கறிவேப்பிலை ஆர்க்கு ஒன்று உருவிப் போட்டு, சப்தம் அடங்கியதும் சாம்பாரில் கொட்டிக் கிளறி விடவும்.
பிறகு சிறிது பெருங்காயத்தைச் சிறிது நீரில் கரைத்து சாம்பாரில் ஊற்றி ஒரு கொதி வந்ததும் இறக்கி விடவும். மல்லித்தழை 10 அலம்பிக் கிள்ளிப் போடவும்.

No comments:
Post a Comment