பெரிய உருளைக்கிழங்கு 300 கிராம் இதைத் தோலோடு சுத்தமாக அலம்பிக் கொள்ளவும். பிறகு நீளவாட்டில் நான்கு துண்டுகளாக அரிந்து அந்தத் துண்டுகளை மீண்டும் சிறு சிறு துண்டுகளாகப் போட்டு ஜலத்தில் போட்டு வைக்கவும்.
வாணலியில் நான்கு தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு அரைத் தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு ஒரு தேக்கரண்டி, கறிவேப்பிலை ஆர்க்கு ஒன்று, இவற்றை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டுத் தாளிதம் செய்து, அரிந்து வைத்துள்ள உருளைக்கிழங்கைப் போட்டு புரட்டிக் கொடுக்கவும். உருளைக்கிழங்கில் இருக்கும் ஜலம் முக்கால் பாகம் சுண்டும் வரை புரட்டிக் கொண்டே இருந்து, பிறகு பொடி செய்த உப்பு ஒரு தேக்கரண்டி போட்டுப் புரட்டிக் கொடுக்கவும். சுண்டைக்காய் அளவு புளி கெட்டியாய்க் கரைத்துவிடவும்.
பிறகு சாம்பார்ப் பொடி இரண்டு தேக்கரண்டி போட்டுக் கிழங்கு நன்றாக வெந்ததும் நெய் அரைத் தேக்கரண்டி போட்டு புரட்டிக் கொடுத்து மல்லித் தழை பத்து போட்டு இறக்கவும்.
வாழைக்காயையும் இதே போல் பொரியல் செய்யலாம்.

No comments:
Post a Comment