Monday, February 28, 2011

முட்டைக்கோஸ் பொரியல்

200 கிராம் முட்டைக்கோசைப் பொடிப் பொடியாய் அரிந்து 30 கிராம் பச்சைப் பட்டாணியையும் சேர்த்து சிறிது மஞ்சள் தூள் போட்டு ஆழாக்கு ஜலத்தில் வேக வைத்து ஜலத்தைக் கொட்டிவிட்டு முட்டைக்கோசையும் பட்டாணியையும் எடுத்து வைத்துக் கொள்ளவும். சிறிய அளவில் உள்ள உருளைக்கிழங்கு பத்தை வேக வைத்து தோல் உரித்து நான்கு நான்கு துண்டங்களாக அரிந்து கொள்ளவும்.

சிறிய தக்காளிப் பழம் ஒன்றை எட்டாக அரிந்து கொள்ளவும். மூன்று பச்சை மிளகாயை நீளவாக்கில் அரிந்து கொள்ளவும்.

தாளிப்புக்கு ஒரு பாத்திரம் வைத்து 5 தேக்கரண்டி நெய்விட்டுக் காய்ந்ததும் கடுகு அரைக்கால் தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு ஒரு தேக்கரண்டி, இரண்டாகப் பிளந்த முந்திரிப் பருப்பு இருபது, கறிவேப்பிலை ஆர்க்கு ஒன்று இவற்றை ஒன்றன்பின் ஒன்றாகத் தாளிதத்தில் போட்டு உளுத்தம் பருப்பு சிவந்ததும் தக்காளிப் பழத்தையும் பச்சை மிளகாயையும் போட்டு வதக்கி முட்டைக்கோஸ், பட்டாணி, உருளைக்கிழங்கு இவற்றைப் போட்டு புரட்டிக் கொடுத்து உப்புப் பொடி ஒன்றரைத் தேக்கரண்டி போட்டுக் கிளறவும்.

பிறகு தேங்காய்த் துருவல் 5 தேக்கரண்டி போட்டு நன்றாகக் கிளறி சிறிது எலுமிச்சம் பழச் சாறு பிழிந்து புரட்டிக் கொடுத்து இறக்கிக் கொள்ளவும்.

No comments:

Post a Comment