பிஞ்சு அவரைக்காய் இருநூறு கிராம், இதைக் காம்பும் நுனியும் ஆய்ந்து, ஜலத்தில் போட்டுக் கழுவிக் கொள்ளவும். உப்பு அரைத் தேக்கரண்டி, மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை, ஆழாக்கு ஜலம் இவற்றையும் அவரைக்காயையும் போட்டு வேக வைத்து ஜலத்தை வடித்துவிட்டு காயை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
மிளகாய் வற்றல் இரண்டு, தனியா பத்து கிராம், சீரகம் பத்து கிராம், கொப்பரைத் தேங்காய்த் துருவல் ஒரு தேக்கரண்டி இவற்றை நெய்விட்டு நேக அரைத்து 100 மில்லி சுத்த ஜலத்தில் கரைத்து வேக வைத்திருக்கும் அவரைக்காயை அதில் போட்டு, தாளிப்புக்கு ஒரு பாத்திரம் வைத்து இரண்டு தேக்கரண்டி நெய் விட்டுக் காய்ந்ததும் அரிந்த வெங்காயம் நான்கு தேக்கரண்டி, சீரகம் கால் தேக்கரண்டி, கறிவேப்பிலை கொஞ்சம் இவை போட்டு வெங்காயம் சிவந்ததும் மசாலையோடு சேர்த்து வைத்திருக்கும் அவரைக்காயை அதில் கொட்டி கொதி வந்த பிறகு தேங்காய்ப் பால் அரை மூடி விட்டு, கறி மசாலாப் பொடி ஒரு தேக்கரண்டி போட்டு, மல்லித்தழை பத்து போட்டுக் கிளறி கொடுத்து இறக்கவும்.

No comments:
Post a Comment