சர்க்கரை வள்ளிக்கிழங்கு இருநூறு கிராம் சேகரித்து மேல் தோல் சீவி வட்டமாக அரிந்து கொள்ளவும்.
மிளகாய் நான்கு, மிளகு ஆறு, மஞ்சள் ஒரு சிட்டிகை இவற்றை நெய்யில் வறுத்து நேக அரைத்து ஜலம் விட்டுக் கரைத்து சர்க்கரைவள்ளிக் கிழங்குடன் சேர்த்து அடுப்பில் வைத்து வேக விடவும்.
நன்றாகக் கொதித்த பின் ஜலத்தை வடித்துவிட்டு உப்புப் பொடி அரைத் தேக்கரண்டி சேர்த்துக் கிளற வேண்டும்.
பிறகு தாளிப்புக்குப் பாத்திரம் வைத்து, இரண்டு தேக்கரண்டி நெய்விட்டுக் காய்ந்ததும் உளுத்தம் பருப்பு அரைத் தேக்கரண்டி, கடுகு அரைக்கால் தேக்கரண்டி, சீரகம் கால் தேக்கரண்டி இவைகளைப் போட்டு கறிவேப்பிலை ஆர்க்கு ஒன்று சேர்த்து சப்தம் அடங்கியதும் சர்க்கரைவள்ளிக் கிழங்கை அதில் போட்டுப் புரட்டி தேங்காய்த் துருவல் அரை மூடி போட்டு கறிமாப் பொடி ஒரு தேக்கரண்டி போட்டு மல்லித்தழை சிறிது போட்டுக் கிளறி இறக்கவும்.

No comments:
Post a Comment