Thursday, February 24, 2011

பிட்லைக் குழம்பு

கடலைப் பருப்பு - நான்கு தேக்கரண்டி
மிளகாய் - பத்து
தேங்காய் - ஒன்று
புளி - ஆரஞ்சுப் பழ அளவு
வெல்லம் - அரை அச்சு
அரிசி மாவு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
மிளகு - ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லி விதை - நான்கு தேக்கரண்டி
எண்ணெய் - இரண்டு மேஜைக்கரண்டி
மஞ்சள் பொடி - மூன்று தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிதளவு
துவரம் பருப்பு - இரண்டு மேஜைக்கரண்டி
பாகற்காய் - 350 கிராம்

செய்முறை:

முதலில் புளியைக் கரைத்துக் கொள்ள வேண்டும். பாகற்காயை நறுக்கிக் கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் இரண்டு கரண்டி அளவு புளித் தண்ணீரை கொஞ்சம் தண்ணீர் கலந்து மஞ்சள் பொடி, உப்பு, வெல்லம் போட்டு வேக வைக்க வேண்டும்.

துவரம் பருப்பையும் கொஞ்சம் கடலைப் பருப்பையும் தனியே வேக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடலைப் பருப்பு, மிளகாய், மிளகு, கொத்தமல்லி விதை, தேங்காய்த் துருவல் முதலியவற்றை சிவந்து வரும் வரை ஒவ்வொன்றாக வறுத்து பெருங்காயத்தையும் அத்துடன் பொரித்துக் கொண்டு எல்லாவற்றையும் அம்மியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.

காய் வெந்ததும் மீதமுள்ள கொதி நீரை விட்டுக் கொதிக்க விட வேண்டும்.

நன்றாகக் கொதித்ததும் அரைத்து வைத்துள்ள விழுதைப் போட்டு கலக்கி வேகவைத்த பருப்புகளையும் கொட்டிக் கொள்ள வேண்டும்.

பிறகு மிளகாய், கடுகு இரண்டையும் போட்டுத் தாளித்து கடைசியில் மாவைக் கரைத்து ஊற்றி சில நிமிடங்கள் கொதிக்கவிட்டு கறிவேப்பிலை கிள்ளிப் போட்டு இறக்கி விட வேண்டும்.

No comments:

Post a Comment