Thursday, February 24, 2011

கறிவேப்பிலைக் குழம்பு

தேவையானவை:

கறிவேப்பிலை - 125 கிராம்
மிளகு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிதளவு
உளுத்தம் பருப்பு - ஒரு மேஜைக்கரண்டி
மிளகாய் - பத்து
புளி - ஆரஞ்சுப் பழ அளவு
கடலைப் பருப்பு - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

புளியை வேண்டிய அளவு நீரில் கரைத்து உப்பு கலந்து கொதிக்க வைக்க வேண்டும்.

முதலில் எண்ணெயில் மிளகு, மிளகாய் வற்றல், உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை இவற்றை வறுத்து நன்றாக அரைத்துக் கொண்டு அந்த விழுதை கொதிக்கும் புளி நீரில் கொட்டி நன்றாகக் கொதிக்கவிட்டு, உளுத்தம் பருப்பு, கடுகு, பெருங்காயம் இவற்றைப் போட்டுத் தாளித்து இறக்கி வைக்கவும்.

No comments:

Post a Comment