இரண்டு தேக்கரண்டி கடலைப் பருப்பு, ஒரு தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, அரைத் தேக்கரண்டி மிளகு, மிளகாய் வற்றல் எட்டு, சுண்டைக்காய் அளவு பெருங்காயம், கால் தேக்கரண்டி வெந்தயம் இவற்றைச் சிறிது நல்லெண்ணையில் தனித்தனியே வறுத்து நன்றாகப் பொடி செய்து கொள்ளவும்.
300 மில்லி ஜலத்தில் எலுமிச்சங்காய் அளவு புளியும், இரண்டு தேக்கரண்டி உப்பும், சிறிது மஞ்சள் பொடியும் போட்டுக் கரைத்து அடுப்பில் வைக்கவும். 200 கிராம் சேனைக் கிழங்கை தோல் போக்கி, பெரிய நெல்லிக்காய் அளவு அரிந்து புளி ஜலத்தில் போடவும். புளி ஜலம் கொதித்து, கிழங்கு வெந்ததும் தயார் செய்து வைத்திருக்கும் பொடியைப் போட்டு, ஒரு ஆர்க்கு கறிவேப்பிலையை உருவிப் போடவும். குழம்பு கொதித்துச் சிறிது வற்றியதும் இறக்கி விடவும்.

No comments:
Post a Comment