Thursday, February 24, 2011

வெள்ளைப் பூண்டு புளிக்குழம்பு

மிளகாய் வற்றல் நான்கு, தனியா இரண்டு தேக்கரண்டி, பச்சை அரிசி ஒரு தேக்கரண்டி, கொப்பரைத் துருவல் இரண்டு தேக்கரண்டி, கறிவேப்பிலை ஒரு ஆர்க்கு, பெருங்காயம் சிறிதளவு இவற்றை வாணலியில் தனித்தனியே வறுத்து அம்மியில் வைத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

வெள்ளைப் பூண்டு ஒன்றைத் தோல் உரித்து வைத்துக் கொள்ளவும்.

400 மில்லி ஜலத்தில் மூன்று தேக்கரண்டி உப்பும் எலுமிச்சங்காய் அளவு புளியும் போட்டுக் கரைத்துக் கொஞ்சம் மஞ்சள் தூளும் போட்டுக் கொள்ளவும்.

குழம்பு சட்டியை அடுப்பில் வைத்து நான்கு தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு அரைக்கால் தேக்கரண்டி, வெந்தயம் கால் தேக்கரண்டி, கடலைப்பருப்பு ஒரு தேக்கரண்டி போட்டு, கடலைப்பருப்பு சிவந்து வரும் சமயம் வெள்ளைப் பூண்டுப் பருப்புகளைப் போட்டு அரைத்து வைத்திருக்கும் சம்பாரதையும் போட்டு நன்றாக வதக்கவும்.

சம்பாரமும் வெள்ளைப் பூண்டும் சுருளச் சுருள வதங்கியதும் கரைத்து வைத்திருக்கும் புளி ஜலத்தை விட்டுக் கொதிக்க விடவும்.

குழம்பு சுமார் ஒன்றரை ஆழாக்கு அளவுக்கு வற்றியதும் இறக்கி விடவும்.

No comments:

Post a Comment