Thursday, February 24, 2011

தேங்காய்ப் பால் குழம்பு

மிளகாய் வற்றல் ஆறு இதை நல்லெண்ணையில் வறுத்துக் கொள்ளவும். கடலைப் பருப்பு ஒரு தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு ஒரு தேக்கரண்டி, கசகசா ஒரு தேக்கரண்டி, துவரம் பருப்பு இரண்டு தேக்கரண்டி, தனியா ஒரு தேக்கரண்டி இவற்றைத் தனித்தனியே வாசனை வரும் வரை வறுத்து ஒன்று சேர்த்து அம்மியில் வைத்து அரைத்துக் கொள்ளவும்.

200 கிராம் கத்தரிக்காயை நான்காக வகுத்து நீரில் போட்டு அலம்பிக் கொள்ளவும்.

எலுமிச்சங்காய் அளவு புளியை 200 மில்லி ஜலத்தில் கரைத்து மூன்று தேக்கரண்டி உப்புப் போட்டு வைத்துக் கொள்ளவும்.

பிறகு கத்தரிக்காயைப் புளி ஜலத்தில் போட்டு வேக வைக்கவும். காய் முக்கால் பதம் வெந்ததும், அரைத்து வைத்திருக்கும் சம்பாரத்தை இரண்டு ஆழாக்கு ஜலத்தில் கரைத்து கொதித்துக் கொண்டிருக்கும் குழம்பில் விடவும்.

கத்தரிக்காய் ஒன்றாய் வெந்து மசால் நெடி போனதும் கொப்பரைத் தேங்காய் ஒன்றைத் துருவி கெட்டியாகப் பால் பிழிந்து கொதித்துக் கொண்டிருக்கும் குழம்பில் விடவும். ஒரு கொதி வந்ததும் குழம்பை இறக்கிக் கொள்ளவும்.

No comments:

Post a Comment