Thursday, February 24, 2011

காரட் சாம்பார்

400 மில்லி ஜலத்தில் 100 கிராம் துவரம் பருப்பைக் குழைய வேக வைத்துக் கொண்டு 200 கிராம் காரட்டை நன்றாக அலம்பி வளையம் வளையமாக ஒரு ரூபாய் கனத்தில் அரிந்து பருப்பில் போட்டு 5 பச்சை மிளகாயைத் துண்டித்து விடாமல் பிளந்து போட்டுக் கிளறிக் கொடுத்து வேக வைக்கவும்.

காய் முக்கால் பதம் வெந்ததும் எலுமிச்சம் பழ அளவு புளியும் மூன்று தேக்கரண்டி உப்பும் போட்டு 2 ஆழாக்கு ஜலத்தில் செம்மையாகக் கரைத்து சாம்பார்ப் பொடி இரண்டு அல்லது மூன்று தேக்கரண்டி போட்டுக் கரைத்து பருப்போடு வெந்து கொண்டிருக்கும் காரட்டில் கொட்டவும்.

காய் வெந்து நன்கு பக்குவமானதும் தாளிப்புக் கரண்டியில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு கால் தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு அரைத் தேக்கரண்டி, வெந்தயம் 5 மிளகாய் வற்றல் இரண்டு, கறிவேப்பிலை ஆர்க்கு ஒன்று இவற்றைப் போட்டுத் தாளித்துச் சாம்பாரில் போடவும்.

ஒரு கொதி வந்ததும் சிறிதளவு பெருங்கயாத்தைச் சிறிது நீரில் கரைத்து சாம்பாரில் கொட்டி மறு கொதி வந்ததும் இறக்கி விடவும்.

No comments:

Post a Comment