100 மில்லி துவரம் பருப்பை 400 மில்லி ஜலத்தில் மஞ்சள் பொடி போட்டு குழைய வேக வைத்துக் கொள்ளவும்.
மிளகாய் வற்றல் ஆறு, மஞ்சள் சிறிது, தனியா இரண்டு தேக்கரண்டி, பட்டை சிறு துண்டு, சோம்பு கால் தேக்கரண்டி, கிராம்பு இரண்டு, அனாரஸ் பூ ஒன்று, ஏலக்காய் ௨, கல்பாசி கால் ரூபாய் எடை, கசகசா அரை ரூபாய் எடை, பொட்டுக்கடலை கால் ஆழாக்கு இவற்றைத் தனித்தனியே நல்லெண்ணையில் வறுத்து வெண்ணெய் போல் அரைத்துக் கொள்ளவும்.
200 மில்லி ஜலத்தில் புளி எலுமிச்சங்காய் அளவு, உப்பு மூன்று தேக்கரண்டி போட்டு கரைத்துக் கொள்ளவும்.
பிறகு குழம்பு செய்யும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து மூன்று தேக்கரண்டி நெய் விட்டுக் காய்ந்ததும் வெந்தயம் இருபது, கடுகு கால் தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு இரண்டு தேக்கரண்டி போட்டு கடுகு வெடித்ததும் முப்பது கிராம் வெங்காயத்தைச் சிறிதாய் அரிந்து போட்டு அது சிவந்து வரும் சமயத்தில் கரைத்து வைத்திருக்கும் மசாலாவை அதில் கொட்டி மேலும் ஒரு ஆழாக்கு ஜலம் விட்டு மூடி நன்றாகக் கொதிக்க விடவும்.
கொதித்துக் குழம்பு பக்குவமானதும் கொப்பரைத் தேங்காயின் மூடி ஒன்றைத் துருவி அதைச் சிவக்க வறுத்து அம்மியில் வைத்து அரைத்து அரை ஆழாக்கு ஜலத்தில் கரைத்து அரிசிமாவு ஒரு தேக்கரண்டி, பொடிப் பொடியாய் அரிந்த மல்லித்தழை இரண்டு தேக்கரண்டி இவற்றைப் போட்டுக் கொதிக்கும் குழம்பில் கொட்டி ஒரு கொதி வந்ததும் இறக்கி விடவும்.

No comments:
Post a Comment