Thursday, February 24, 2011

நாட்டுச் சுண்டைக்காய் சாம்பார்

50 கிராம்   பாசிப் பருப்பை ஒன்றரை ஆழாக்கு ஜலத்தில் மஞ்சள் பொடி சிறிது போட்டு வேக வைத்துக் கொள்ளவும்.

நாட்டுச் சுண்டைக்காய்ப் பிஞ்சு அரை ஆழாக்கு இதைக் காம்பு போக்கி நான்காக அரிந்து ஜலத்தில் போட்டு வைக்கவும்.

பெரிய வெள்ளைப் பூண்டில் பாதியைத் தோல் போக்கி உரித்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு லிட்டர் கொள்கிற ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நான்கு தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டுக் காய்ந்ததும், கடுகு கால் தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு அரைத் தேக்கரண்டி, கடலைப் பருப்பு அரைத் தேக்கரண்டி, பெருங்காயப் பொடி சிறிதளவு, கறிவேப்பிலை கொஞ்சம் இவற்றைப் போட்டு உளுத்தம் பருப்பு சிவந்ததும் அரிந்து வைத்திருக்கும் வெங்காயம், வெள்ளைப் பூண்டு போட்டு நன்கு வதக்கியப் பின் அரிந்து வைத்திருக்கும் சுண்டைக்காயைப் பிழிந்து போட்டு வதக்கவும்.

200 மில்லி ஜலத்தில் எலுமிச்சங்காய் அளவு புளி, இரண்டு தேக்கரண்டி உப்பு, சாம்பார்ப் பொடி மூன்று தேக்கரண்டி இவற்றைப் போட்டுக் கரைத்து குழம்பில் விட்டு கொதிக்க விடவும். குழம்பு நன்றாகக் கொதித்துச் சிறிது சுண்டியதும் சுண்டைக்காய் அளவு வெல்லத்தைப் போட்டுக் கொதிக்க விடவும்.

ஒரு கொதி வந்ததும் தயார் செய்து வைத்திருக்கும் பாசி பருப்பைக் கூழ் போல் அரை ஆழாக்கு ஜலத்தில் கரைத்துக் குழம்பில் கொட்டி இரண்டு கொதி வந்ததும் இறக்கவும்.

No comments:

Post a Comment