Thursday, February 24, 2011

அவசர சாம்பார்

முக்கால் லிட்டர் கொள்கிற ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நான்கு தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கால் தேக்கரண்டி கடுகு, கடலைப் பருப்பு அளவு பெருங்காயம், உளுத்தம் பருப்பு ஒரு தேக்கரண்டி, மிளகாய் வற்றல் 10 கிள்ளிப் போடவும். சிவந்து வரும் சமயத்தில் ஒரு கறிவேப்பிலை ஆர்க்கை உருவிப் போட்டு சப்தம் அடங்கியதும், 200 கிராம் வெண்டைக்காயை ஒரு அங்குலம் அளவில் அரிந்து, தாளித்ததில் போட்டு நன்றாக வதக்கவும்.

பிறகு எலுமிச்சங்காய் அளவு புளியை மூன்று ஆழாக்கு ஜலத்தில் உப்பு மூன்று தேக்கரண்டியுடன் போட்டுக் கரைத்து வெண்டைக்காயில் கொட்டி மூடி வைக்கவும். அரை ஆழாக்கு துவரம் பருப்பை அம்மியில் வைத்து அரைத்து 100 மில்லி ஜலத்தில் கரைத்து, குழம்பில் கொட்டவும். அரைத் தேக்கரண்டி வெந்தயத்தை வறுத்துப் பொடி செய்து சாம்பாரில் போடவும்

No comments:

Post a Comment