கத்தரிக்காய் 200 கிராமை வட்ட வட்டமாக அரிந்து ஜலத்தில் போட்டு அலம்பி எடுத்துக் கொள்ளவும்.
மிளகாய் மூன்று, மிளகு ஆறு, மல்லி ஒரு தேக்கரண்டி, மஞ்சள் ஒரு சிட்டிகை இவற்றை நைசாக அரைத்துக் கத்தரிக்காயில் போடவும்.
100 மில்லி ஜலம் விட்டு உப்பு ஒரு தேக்கரண்டி போட்டு கத்தரிக்காயை வேக வைக்கவும்.
பயற்றம் பருப்பு 50 கிராம் வேக வைத்து கத்தரிக்காயுடன் சேர்க்கவும். தேங்காய்த் துருவல் கால் மூடி போட்டுக் கிளறி விடவும்.
தாளிப்புக்கு ஒரு பாத்திரம் வைத்து நெய் இரண்டு தேக்கரண்டி விட்டுக் காய்ந்ததும் கடுகு அரைக்கால் தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு கால் தேக்கரண்டி, பெருங்காயம் சிறிதளவு, கறிவேப்பிலை ஆர்க்கு ஒன்று போட்டுத் தாளிதம் செய்து பிறகு தயார் செய்து வைத்திருக்கும் கத்தரிக்காயை அந்த தாளிப்பில் போட்டுப் புரட்டிக் கொடுத்து கறி மசாலாப் பொடி மூன்று தேக்கரண்டி சேர்த்துக் கிளறி விடவும்.

No comments:
Post a Comment