ஒரு மேஜைக்கரண்டி துவரம் பருப்பு, ஒரு தேக்கரண்டி உளுத்தம் புறுப்பு, எட்டு மிளகாய், சிறிது பெருங்காயம் ஆகியவற்றைச் சிவக்க வறுத்து அரைத்துக் கொள்ளவும். ஒரு எலுமிச்சங்காய் அளவு புளி, ஒரு மேஜைக்கரண்டி உப்பு இரண்டையும் ஆழாக்குத் தண்ணீரில் ஊற வைத்து மேலும் இரண்டு ஆழாக்கு நீராகக் கரைத்துக் கொள்ளவும். குழம்பு பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஒரு கரண்டி எண்ணெய் விட்டு அது காய்ந்ததும் ஒரு மேஜைக்கரண்டி கடலைப் பருப்பு, ஒரு தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, ஒரு தேக்கரண்டி கடுகு, இரண்டு மேஜைக்கரண்டி சுண்டைக்காய் வற்றல் ஆகியவற்றைப் போட்டு நன்றாகச் சிவக்க வறுக்கவும். பிறகு அதில் கரைத்த புளியைக் கொட்டி அரைத்து வைத்ததையும் போடவும். நன்றாகக் கொதி வந்ததும் சிறிது கறிவேப்பிலைப் போட்டு இறக்கி வைக்கவும்.

No comments:
Post a Comment