காய்கள் போட்டோ அல்லது போடாமலோ இக்குழம்பைச் செய்யலாம். காய்களாக இருந்தால் முதலிலேயே வேக வைத்துக் கொள்ள வேண்டும். பூசணிக்காய், வெண்டைக்காய், கத்தரிக்காய், சேப்பங்கிழங்கு ஆகிய காய்களையே உபயோகிக்கலாம்.
ஒரு மேஜைக்கரண்டி கடலைப் பருப்பு, ஒரு தேக்க்கர்ந்டி கொத்தமல்லி விதை, இரண்டையும் சிறிது தண்ணீர் விட்டு ஊற வைக்கவும். பிறகு அவற்றுடன் எட்டு பச்சை மிளகாய், ஒரு தேங்காய் வில்லை முதலியவற்றை வைத்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். ஆழாக்குப் புளித்த தயிரை நன்றாகக் கரைத்து மேலும் இரண்டு ஆழாக்கு தண்ணீர் விட்டுக் கலக்கி அதில் அரைத்தவற்றைப் போட்டு கரைக்கவும். ஒரு மேஜைக்கரண்டி உப்பு, ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி இரண்டையும் போட்டு அடுப்பில் வைக்கவும். குழம்பு கொதி வந்ததும் காய் இருந்தால் அதைப் போடவும். எல்லாமாகச் சேர்ந்து நன்றாகக் கொதி வந்ததும் சிறிது கடுகு, பெருங்காயம் தாளித்துக் கொட்டிச் சிறிது கறிவேப்பிலை, கொத்தமல்லியைக் கிள்ளிப் போட்டு இறக்கி வைக்கவும்.

No comments:
Post a Comment