Monday, February 28, 2011

மிளகு ரசம்

தேவையானவை:

மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி
தேங்காய்ப்பூ - ஒரு தேக்கரண்டி
சிறிய வெங்காயம் - பத்து
காய்ந்த மிளகாய் - நான்கு
புளி - ஒரு எலுமிச்சம் அளவு
உப்பு - தேவையான அளவு
மல்லித்தூள் - ஒரு தேக்கரண்டி
சீரகம் - அரைத் தேக்கரண்டி
மஞ்சள் - ஒரு சிட்டிகை
கடுகு - அரைத் தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

தேங்காயையும் சீரகத்தையும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். சிறிய வெங்காயத்தைச் சேர்த்துத் தட்டிக் கொள்ள வேண்டும்.

பாத்திரத்தில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகைப் போட வேண்டும். கடுகு வெடித்ததும் மிளகாயைக் கிள்ளிப் போட வேண்டும். மிளகாய் சிவந்ததும் கறிவேப்பிலையைப் போட்டு அது வெடித்ததும் புளியைக் கரைத்து ஊற்றி, மிளகாய், மல்லித்தூள், அரைத்த விழுது, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும். நன்றாகக் கொதித்ததும் இறக்கிவிட வேண்டும்.

தாளிக்கும் போது மோர் மிளகாய் இருந்தால் போடலாம்.

No comments:

Post a Comment