Wednesday, February 23, 2011

தக்காளிச் சாதம்


தேவையானவை:

அரிசி - 500 கிராம்
தேங்காய் - ஒரு மூடி
பூண்டு - 8 பல்
வெங்காயம் - 50 கிராம்
பட்டை - சிறு துண்டு
கிராம்பு - 5
உப்பு - தேவையான அளவு
தக்காளி - 200 கிராம்
இஞ்சி - சிறு துண்டு
சீரகம் - ஒன்றரை தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 8
ஏலக்காய் - 5
நல்லெண்ணெய் - 100 மில்லி

செய்முறை:

தேங்காயைத் துருவிப் பால் எடுத்துக் கொள்ள வேண்டும். தக்காளியை வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

இஞ்சி, பூண்டு, சீரகம் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை லேசாகத் தட்டி அரைத்துக் கொள்ள வேண்டும்.

பாத்திரத்தை அடுப்பிலேற்றி எண்ணெய் விட்டுக் காய்ச்ச வேண்டும்.

எண்ணெய் காய்ந்ததும் பட்டை, ஏலம், கிராம்பு  சேர்த்து பொரிக்க வேண்டும். பொரிந்ததும் அரைத்த பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி, பூண்டு, சீரகத்தைப் போட்டு வதக்க வேண்டும். வாசனை வந்ததும் தக்காளிப் பழத் துண்டுகளைப் போட வேண்டும்.

தக்காளி நன்றாக வதங்கியதும் தேங்காய்ப் பாலும் நீருமாக ஒரு லிட்டர் ஊற்றி அரிசியைப் போட்டு வேக விட வேண்டும்.

No comments:

Post a Comment