ஒரு பலாப்பிஞ்சு வாங்கி மேல் தோலைப் போக்கி விட்டு சிறு வெல்ல அச்சு அளவு அரிந்து சிறிது மஞ்சள் தூளும், ஒரு தேக்கரண்டி உப்பும் போட்டு ஜலம் விட்டு வேக வைத்துக் கொள்ளவும். பலாப்பிஞ்சு நன்றாக வெந்ததும் ஜலத்தை வடித்துவிட்டு நன்றாக இடித்துக் கொள்ளவும்.
பிறகு வாணலியில் கொஞ்சம் நெய் விட்டுக் காய்ந்ததும் இரண்டு தேக்கரண்டி கடலைப் பருப்பு, 5 மிளகாய் வற்றல், தேங்காய்த் துருவல் மூன்று தேக்கரண்டி இவற்றை வறுத்துப் பொடி செய்து கொள்ளவும்.
பிறகு தாளிப்புக்கு ஒரு பாத்திரம் வைத்து இரண்டு தேக்கரண்டி நெய்விட்டுக் காய்ந்ததும் கடுகு அரைக்கால் தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு அரைத் தேக்கரண்டி, கறிவேப்பிலை ஆர்க்கு ஒன்று இவற்றைப் போட்டுத் தாளிதம் செய்து சுத்தம் செய்து வைத்திருக்கும் பலாக்காயை அதில் கொட்டிக் கிளறிக் கொடுக்கவும். பிறகு பொடியையும் போட்டுக் கிளறி இறக்கவும்.

No comments:
Post a Comment