பெரிய தேங்காய் அளவு உள்ள பலாப்பிஞ்சு ஒன்றைக் கொண்டு வண்டு முள் போல இருக்கும் மேல் தோலைச் சீவி எறிந்து விட்டு பலாப்பிஞ்சைக் கொட்டைப்பாக்கு அளவில் அரிந்து கொள்ளவும். 200 மில்லி ஜலத்தில் போதிய அளவு உப்பும் மஞ்சள் பொடியும் போட்டு நன்றாக வேக வைத்து ஜலத்தைக் கொட்டிவிட்டு பலாக்காயை எடுத்துக் கொள்ளவும்.
50 கிராம் பயற்றம் பருப்பை நெய்யில் வறுத்து அரை ஆழாக்கு ஜலத்தில் வேக விடவும்.
மிளகாய் இரண்டு, மிளகு ஆறு, மல்லி ஒரு தேக்கரண்டி, கொப்பரைத் துருவல் இரண்டு தேக்கரண்டி இவற்றை நெய் விட்டு வறுத்து நைசாக அரைத்து கால் ஆழாக்கு ஜலத்தில் கரைத்துப் பருப்பில் கொட்டி பலாப் பிஞ்சுத் துண்டுகளைப் போடவும்.
பலாக்காய் நன்றாய் வெந்து ஜலம் சுண்டியதும் தாளிப்புக்கு ஒரு பாத்திரம் வைத்து நெய் இரண்டு தேக்கரண்டி விட்டு காய்ந்ததும் அரிந்த வெங்காயம் நான்கு தேக்கரண்டி, சீரகம் அரைத் தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு ஒரு தேக்கரண்டி, கறிவேப்பிலை ஆர்க்கு போட்டு சிவந்ததும் பலாப்பிஞ்சை அத்துடன் கொட்டி, தேங்காய்த் துருவல் கால் மூடி போட்டு கறி மசாலாப் பொடி ஒரு தேக்கரண்டி, மல்லித்தழை பத்து போட்டு புரட்டிக் கொடுத்து இறக்கி விடவும்.

No comments:
Post a Comment