Thursday, February 24, 2011

தக்காளிக் குழம்பு

தேவையானவை:

தக்காளி - கால் கிலோ
மிளகாய்த் தூள் - இரண்டரை தேக்கரண்டி
மல்லித் தூள் - ஒன்றரை தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 4 தேக்கரண்டி
சிறிய வெங்காயம் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 10
தேங்காய் - பெரிய மூடி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தக்காளியைக் கொதிக்கும் நீரில் போட வேண்டும். சற்றுப் பொறுத்து எடுத்துக் குளிர் நீரில் போட வேண்டும். சிறிது ஆறியதும் தக்காளியின் தோலை எளிதாக உரிக்க வரும். தோலை நன்கு உரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். உரித்த பழங்களை நன்றாகப் பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

தேங்காயைத் துருவி கெட்டியாக பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பச்சை மிளகாயை அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

சிறிது வெங்காயங்களை உரித்து இரண்டு அல்லது நான்காக நீள வாட்டில் வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

பாத்திரத்தை அடுப்பிலேற்றி எண்ணெய் விட வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் கடுகைப் போட வேண்டும்.

கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்க வேண்டும்.

வெங்காயம் நிறம் மாறியதும் தேங்காயில் இருந்து இரண்டாம் முறை எடுத்த பாலையும், தக்காளி, மிளகாய் தூள், மல்லி தூள் எல்லாம் போட்டுக் கொதிக்க விட வேண்டும்.

5 நிமிடங்கள் கழித்து, முதலில் எடுக்கப்பட்ட கெட்டித் தேங்காய்ப் பாலை விட்டு உப்புப் போட்டு எண்ணெய் மிதந்ததும் குழம்பை இறக்கி விட வேண்டும்.

தேவைகேற்ப காரம் கூடக் குறைய சேர்த்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment