Thursday, February 24, 2011

மிளகுக் குழம்பு

தேவையானவை:

மிளகு - ஒன்றரை தேக்கரண்டி
கொத்தமல்லி விதை - ஒன்றரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிதளவு
கடுகு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - நான்கு தேக்கரண்டி
கடலைப் பருப்பு - ஒன்றரை தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - நான்கு
புளி - எலுமிச்சம் அளவு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மிளகு, கொத்தமல்லி விதை, கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, பெருங்காயம் முதலியவற்றை சிறிது எண்ணெய் விட்டு வறுத்து, பின் நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பாத்திரத்தில் மீதி எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகைப் போட வேண்டும்.

கடுகு வெடித்ததும் கறிவேப்பிலைப் போட்டு புளியைக் கரைத்து ஊற்றி அரைத்த பொருளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பிறகு எண்ணெய் மிதக்கும் அளவுக்கு குழம்பை வற்ற விட வேண்டும்.

No comments:

Post a Comment